கிரிக்கெட் (Cricket)

அரை சதமடித்த ரிஸ்வான்

ரிஸ்வான், குஷ்தில் ஷா அதிரடி - ஹாங்காங் வெற்றிபெற 194 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

Published On 2022-09-02 15:50 GMT   |   Update On 2022-09-02 15:50 GMT
  • டாஸ் வென்ற ஹாங்காங் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • முதலில் ஆடிய பாகிஸ்தான் 193 ரன்களை குவித்தது.

ஷார்ஜா:

15-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

ஷார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான பாபர் அசாம் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய பகர் சமான், முகமது ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். இருவரும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தனர். பகர் சமான் 53 ரன்னில் அவுட்டானார். கடைசி ஓவரில் குஷ்தில் ஷா 4 சிக்சர் அடித்து அசத்தினார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்துள்ளது. ரிஸ்வான் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News