ஜெய்ஸ்வால், சுப்மன் கில் அதிரடி: ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே 152 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 156 ரன்கள் எடுத்து வென்றது.
ஹராரே:
ஜிம்பாப்வே, இந்தியா அணிகள் மோதும் 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் சிக்கந்தர் ராசா 28 பந்தில் 46 ரன்கள் எடுத்தார். டாடிவான்சே மருமானி 32 ரன்னில் அவுட்டானார். வெஸ்லி மாதவரே 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தனர்.
இறுதியில், இந்திய அணி 15.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 3-1 என முன்னிலையில் உள்ளது.
ஜெய்ஸ்வால் 53 பந்தில் 93 ரன்னும், சுப்மன் கில் 39 பந்தில் 58 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.