கிரிக்கெட் (Cricket)

டேரில் மிட்செல் சதம் - இந்தியா வெற்றிபெற 274 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து

Published On 2023-10-22 12:32 GMT   |   Update On 2023-10-22 12:32 GMT
  • டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது.
  • அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 273 ரன்களை எடுத்தது.

தரம்சாலா:

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவன் கான்வே டக் அவுட்டானார். வில் யங் 17 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இந்திய பந்துவீச்சை சமாளித்து ஆடி அரை சதம் கடந்தனர்.

3-வது விக்கெட்டுக்கு இணைந்த ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் ஜோடி 159 ரன்கள் சேர்த்த நிலையில், ரச்சின் ரவீந்திரா 75 ரன்னில் அவுட்டானார். கேப்டன் டாம் லாதம் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். கிளென் பிலிப்ஸ் 23 ரன்னில் அவுட்டானார்.

பொறுப்புடன் ஆடிய டேரில் மிட்செல் சதமடித்து 130 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், சிராஜ், பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News