உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணி வெல்ல வாய்ப்பு- இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கணிப்பு
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியால் ஆஸ்திராலிய அணியின் மீது ஆதிக்கம் செலுத்த முடியும்.
- ஆஸ்திரேலியாவும் மிகச்சிறந்த அணியாக இருந்தாலும் இங்கிலாந்தின் காலநிலைகள் வேறுபட்டது.
லண்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. உலக டெஸ்ட் சாம்பியஷிப்பின் இறுதிப்போட்டி ஜீன் மாதம் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தவறவிட்ட இந்தியா இந்த முறை அதை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக உள்ளது.
அதேவேளையில் உலக டெஸ்ட் சாம்பியந்திப்பின் இறுதிப்போட்டிக்கு முதன் முறையாக நுழைந்துள்ள ஆஸ்திரேலியா தனது முதல் முயற்சியிலேயே வெல்ல வேண்டும் என எதிர்பார்க்கும்.
இந்நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இறுதிபோட்டியில் யார் ஆதிக்கம் செலுத்தி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் காலிங்வுட் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சமீபத்திய பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் வலுவான அணியாக காணப்பட்ட இந்தியாவுக்கு இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய அணி அபாரமாக ஆடி வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியால் ஆஸ்திராலிய அணியின் மீது ஆதிக்கம் செலுத்த முடியும். ஆஸ்திரேலியாவும் மிகச்சிறந்த அணியாக இருந்தாலும் இங்கிலாந்தின் காலநிலைகள் வேறுபட்டது.
இரு அணிகளும் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்துவதை நாம் காண்போம் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.