கிரிக்கெட் (Cricket)

மகளிர் கிரிக்கெட்: இந்திய அணியை 95 ரன்னில் சுருட்டிய வங்காளதேசம்

Published On 2023-07-11 09:32 GMT   |   Update On 2023-07-11 09:32 GMT
  • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்துள்ளது.
  • வங்காளதேசம் தரப்பில் சுல்தானா காதுன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மிர்புர்:

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி மந்தனா -ஷஃபாலி வர்மா ஜோடி களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய இந்திய அணி 33 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது. மந்தனா 13 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஷஃபாலி வர்மா 19 ரன்னிலும் அடுத்து வந்த கேப்டன் கவூர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தனர்.

33 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த இந்தியா அடுத்த ஒரு ரன் எடுப்பதற்க்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. சிறிது நேரம் தாக்குபிடித்த இந்திய அணி 48 ரன்னில் (யாஸ்திகா பாட்டியா 11 ரன்) 4-வது விக்கெட்டையும் 58 ரன்னில் (ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 ரன்) 5-வது விக்கெட்டையும் இழந்தது. 61 ரன்னில் 6-வது விக்கெட்டையும் (ஹர்லீன் தியோல் 6) இந்திய அணி இழந்தது.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்துள்ளது. வங்காளதேசம் தரப்பில் சுல்தானா காதுன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Tags:    

Similar News