தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டி- பார்படாஸ் சென்றடைந்த இந்திய அணி
- டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா - இந்தியா மோதுகிறது.
- இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு நடக்கிறது.
டி20 தொடரின் 2-வது அரைஇறுதியில் இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கோப்பைக்கான இறுதிப் போட்டி பிரிட்ஜ்டவுனில் நாளை நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் நாளை நடைபெறும் இறுதிபோட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி பார்படாஸ் சென்றடைந்தது.
இந்தியா 3-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2007-ம் ஆண்டு நடந்த முதல் 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
2014-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா, இலங்கையிடம் தோற்றது. இந்திய அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.