கிரிக்கெட் (Cricket)
null

டி20 உலகக் கோப்பையுடன் பார்படாசில் இருந்து புறப்பட்ட இந்திய அணி

Published On 2024-07-03 09:11 GMT   |   Update On 2024-07-03 11:47 GMT
  • புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
  • இந்தியா அணி வீரர்கள் பார்படாசில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பினர்.

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸில் இருந்து இந்தியா அணி தாயகம் திரும்பவதாக இருந்தது. அந்த நிலையில் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான 'பெரில்' புயல் தீவிரமடைந்தது. இந்த புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர், பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என 70 பேர் அங்கு சிக்கி தவித்தனர். பெரில் புயல் உள்ளூர் நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பார்படாஸ் கரையை கடந்தது.

இருப்பினும், அங்கு சகஜ நிலை திரும்ப தாமதமானதால் இந்திய வீரர்கள் நாடு திரும்புவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்தியா அணி வீரர்கள் பார்படாசில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பினர். இந்த விமானம் நாளை அதிகாலை டெல்லியில் தரையிறங்கும். வெற்றிக்கோப்பையுடன் நாடு திரும்பும் வீரர்களை வரவேற்க நாடே ஆவலாக உள்ளது.


நாடு திரும்புவதை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் உலகக் கோப்பையுடன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோகித் போஸ் கொடுத்தனர்.

Full View


Tags:    

Similar News