2-வது டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 396 ரன்கள் குவித்து ஆல்அவுட்
- ஜெய்ஸ்வாலை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் அரைசதம் கூட தாண்டவில்லை.
- இங்கிலாந்தின் மூன்று பந்து வீச்சாளர்கள் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் சேர்த்தது. ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், அஸ்வின் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அஸ்வின் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 209 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த பும்ரா 6 ரன்னிலும், முகேஷ் குமார் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 396 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சில் ஆல்அவுட் ஆனது. ஜெய்ஸ்வாலை தவிர்த்து இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் அரைசதத்தை தாண்டவில்லை.
இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், பஷிர், அகமது ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.