null
ஐதராபாத் முதல் டெஸ்ட்: மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 108/3
- முகமது சிராஜ் 4 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் கைப்பற்றவில்லை.
- பும்ரா 4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த நிலையில், அவரால் விக்கெட் கைப்பற்ற முடியவில்லை.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி 50 ரன்களுக்கு மேல் சேர்த்தது.
இங்கிலாந்தின் ஸ்கோர் 11.5 ஓவரில் 55 ரன் இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. டக்கெட் 35 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஒல்லி போப் 1 ரன்னில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான கிராவ்லியை 20 ரன்னில் அஸ்வின் வெளியேற்றினார்.
இதனால் இங்கிலாந்து 60 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. கடசி 5 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார்.
இந்த நிலைத்து மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 28 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 18 ரன்களுடனும், பேர்ஸ்டோவ் 32 ரனகளுடனும் களத்தில் உள்ளனர்.