சதத்தை தவறவிட்ட ஜடேஜா: 436 ரன்னில் இந்தியா ஆல்அவுட்
- ஜடேஜா 87 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 4 விக்கெட் சாய்த்தார்.
- இந்தியா முதல் இன்னிங்சில் 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 246 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால் (80), கே.எல். ராகுல் (86) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முன்னிலை வகித்தது.
ஜடேஜாவும் இவர்களுடன் இணைய நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் குவித்தது. ஜடேஜா 81 ரன்னுடனும், அக்சர் பட்டேல் 35 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 97 ரன்னில் ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பும்ரா ரன்ஏதும் எடுக்காமல் அடுத்த பந்தில் வெளியேறினார்.
கடைசி விக்கெட்டுக்க அக்சர் பட்டேல் உடன் சிராஜ் ஜோடி சேர்ந்தார். அக்சர் பட்டேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றார். என்றபோதிலும் 44 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஜோடி ரூட் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இந்தியா முதல் இன்னிங்சில் 190 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.