ஒரே டெஸ்டுடன் ஓரம் கட்டப்பட்ட பிரதிஷ் கிருஷ்ணா... காரணம் இதுதான்
- இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியில் பிரதிஷ் கிருஷ்ணாவுக்கு இடம் கிடைக்கவில்லை.
- ஒரு தொடரோடு அணியில் இருந்து வெளியேற்றப்பட்டது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ரோகித் சர்மா தலைமையிலான இந்த இந்திய அணியில் 27 வயதான வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவிற்கு இடம் அளிக்கப்படாதது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. அவர் அறிமுகமான ஒரு தொடரோடு அணியில் இருந்து வெளியேற்றப்பட்டது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியில் உண்மையாகவே பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்படாததற்கு என்ன காரணம்? என்பது குறித்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
அந்த வகையில் தென்னாப்பிரிக்க தொடரை முடித்து நாடு திரும்பிய பிரசித் கிருஷ்ணா இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ரஞ்சி கோப்பையில் கர்நாடக அணிக்காக விளையாட விரும்பினார். அந்த வகையில் குஜராத் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் வேளையில் அந்த போட்டியில் கர்நாடக அணிக்காக சார்பாக பிரசித் கிருஷ்ணா விளையாடினார்.
அப்படி அவர் விளையாடிய அந்த போட்டியின் இடையே காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக பாதியிலேயே வெளியேறிய அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தசைப்பிடிப்பு மட்டும் ஏற்படவில்லை அதோடு சேர்ந்து குவாட்ரைசெப்ஸ் என்கிற காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த காயம் சரியாக 6 வாரங்கள் வரை ஆகும் என்ற மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாலே அவர் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.