கிரிக்கெட் (Cricket)
மகளிர் கிரிக்கெட்: 2வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 177 ரன்கள் குவிப்பு
- டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 177 ரன்களை எடுத்தது.
சென்னை:
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி சென்னையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வென்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி சென்னையில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தஸ்மின் பிரிட்ஸ் 52 ரன்னும், ஆன்னி போஸ்ச் 40 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ராகர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.