கிரிக்கெட் (Cricket)

15-வது ஓவரில் இருந்து ரிவர்ஸ் ஸ்விங்.. இந்திய பந்து வீச்சாளர்கள் மீது இன்சமாம் குற்றச்சாட்டு

Published On 2024-06-26 07:07 GMT   |   Update On 2024-06-26 07:07 GMT
  • 15-வது ஓவரிலிருந்தே பந்து ரிவர்ஸ் ஸ்விங் செய்யத் தொடங்கியதால் நடுவர்கள் கவனமாக இருந்திருக்க வேண்டும்.
  • இதை பாகிஸ்தானில் ஏதாவது ஒரு வீரர் செய்திருந்தால் ஒருவேளை கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும்.

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ரோகித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 205 ரன்களைச் சேர்த்து.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது சுப்பர் 8 சுற்றுடன் தொடரிலிருந்தும் வெளியேறியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் குற்றச்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இந்த போட்டியின் போது அர்ஷ்தீப் சிங் 15-வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்விங் செய்தார். 15-வது ஓவரிலிருந்தே பந்து ரிவர்ஸ் ஸ்விங் செய்யத் தொடங்கியதால் நடுவர்கள் கவனமாக இருந்திருக்க வேண்டும். இதை பாகிஸ்தானில் ஏதாவது ஒரு வீரர் செய்திருந்தால் ஒருவேளை கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதால் சொல்கிறேன்.

ரிவர்ஸ் ஸ்விங் என்றால் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் அர்ஷ்தீப் போன்ற ஒரு வீரர் 15-வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்விங் செய்கிறார் என்றால், நிச்சயம் பந்தை சேதப்படுத்தி இருந்தால் மட்டுமே முடியும். அதனால் இதுகுறித்து நிச்சயம் நடுவர்கள் கவணிக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு இன்சமாம் உல் ஹக் கூறினார்.

Tags:    

Similar News