கிரிக்கெட் (Cricket)

ஐ.பி.எல். வரலாற்றில் 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சி.எஸ்.கே. சாதனை

Published On 2023-05-24 00:52 GMT   |   Update On 2023-05-24 00:52 GMT
  • ஜடேஜா 18 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
  • தீபக் சாஹர் சுப்மான் கில் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். முதல் குவாலிபையரில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதன் மூலம் இந்த சீசனில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன்மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற வரலாற்று சாதனையைப் பெற்றுள்ளது.

இதற்கு முன் 9 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சி.எஸ்.கே. 4 முறை சாம்பியன் கோப்பையை முத்தமிட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி 6 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 6 முறையில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதில் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

ஆர்.சி.பி. அணி 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மூன்று முறையும் கோப்பையை தவறவிட்டுள்ளது.

சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.3 ஓவரில் 87 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்தில் 60 ரன்கள் விளாசினார்.

Tags:    

Similar News