கிரிக்கெட் (Cricket)

சேப்பாக்கத்தில் பெண்களுக்கு தனி வரிசையில் டிக்கெட் வினியோகம்

Published On 2023-04-27 05:02 GMT   |   Update On 2023-04-27 05:02 GMT
  • சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 30-ஆம் தேதி சென்னை- பஞ்சாப் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.
  • பெண்களுக்கு தனி வரிசை அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.

சென்னை:

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 31-ந்தேதி கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 7 ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி போட்டிகள் நடைபெற்று வருகிறது. சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு ஆன்லை மூலமாகவும், மைதானத்திலும் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி சென்னை சேப்பாக்கத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ள நிலையில், டிக்கெட் வாங்குவதற்காக நேற்று இரவு முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் குவிந்த வண்ணம் உள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், முந்தைய போட்டிக்கான டிக்கெட்டுகள் வினியோகம் செய்யும்போது பெண்களுக்கு தனி வரிசை இல்லை எனவும், ஆண்களுடன் போட்டிபோட்டு டிக்கெட்டுகளை வாங்குவதில் சிரமம் இருப்பதாகவும் பெண்கள் தரப்பில் கூறப்பட்டது. மேலும் பெண்களுக்கு தனி வரிசை அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.

இந்த நிலையில், பெண் கிரிக்கெட் ரசிகர்களின் கோரிக்கையை தொடர்ந்து சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் பெண்களுக்கு தனிவரிசையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Tags:    

Similar News