கிரிக்கெட் (Cricket)
null

கொல்கத்தா அணியின் மறைமுக ஹீரோவாக விளங்கிய பரத் அருண்

Published On 2024-05-27 09:50 GMT   |   Update On 2024-05-27 09:54 GMT
  • ஹர்ஷித் ராணா 11 இன்னிங்சில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
  • வைபவ் ஆரோரா 10 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கொல்கத்தா அணி இந்த முறை கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணி என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் பேட்டிங் யூனிட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுனில் நரைன் இணைந்தார். இது கொல்கத்தா அணியின் பேட்டிங்கிற்கு மிகப்பெரிய பூஸ்ட் ஆக அமைந்தது.

மிகப்பெரிய அனுபவ வீரரான மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் இருந்த போதிலும், இவரது பந்து வீச்சு எடுபடாமல் போனது. இதனால் 24 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது வேஸ்ட் என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

ஆனால் ஸ்டார்க் பலவீனம் ஹர்ஷித் ராணா, வைபஸ் ஆரோரோ ஆகியோரால் மறைக்கப்பட்டது. இரு இளம் வீரர்கள் சிறப்பாக பந்து வீச்சை வெளிப்படுத்தினர். ஸ்விங், ஸ்லோவர் ஒன், ஸ்லோ பவுன்சர் என அசத்தினர். பிளேஆஃப் சுற்று மற்றும் இறுதி போட்டியில் ஸ்டார்க் அசத்திய வேறுகதை.

இறுதிப் போட்டியில் வைபவ் ஆரோரா பந்தில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தது சிறந்த அவுட் ஸ்விங் பந்தாகும் (இடது கை பேட்ஸ்மேனுக்கு). மேலும் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி சுழற்பந்து வீச்சில் ஜாம்பவானாக திகழ்ந்தார்கள்.

கொல்கத்தா அணியின் பந்து வீச்சு சிறப்பாக அமைய, அந்த அணியின் பந்து வீச்சாளர் பரத் அருண் முக்கிய பங்காற்றினார் என்றால் அது மிகையாகாது.

இவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர். இவரது காலத்தில்தான் இந்தியா வேகபந்து வீச்சில் முக்கியத்துவம் பிடித்தது. வெளிநாட்டு ஆடுகளங்களில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கி சாதனைகள் படைத்தது. பும்ரா, முகமது சிராஜ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் ஜொலித்தனர். ஜொலித்து வருகின்றனர்.

அதேபோல் கொல்கத்தா அணியிலும் இளம் வீரர்களிடம் இருக்கும் திறமையை கண்டறிந்து வெளிப்படுத்த முக்கிய காரணமக இருந்துள்ளார். இதனால் கொல்கத்தா அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்த மறைமக கதாநாயகன் என்று இவரை அழைக்கலாம்.

ஹர்ஷித் ராணா 13 போட்டிகளில் 11 போட்டிகளில் பந்து வீசி 19 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். வைபவ் ஆரோரா 10 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஸ்டார்க் 17 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

சுனில் நரைன் 17 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி 21 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார். பஞ்பாப் வீரர் ஹர்ஷல் பட்டேல் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை கைப்பற்றினார்.

Tags:    

Similar News