கிரிக்கெட் (Cricket)

ஐ.பி.எல். 2024 - கே.எல். ராகுல் அதிரடியால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி

Published On 2024-04-19 17:49 GMT   |   Update On 2024-04-19 17:49 GMT
  • கே.எல். ராகுல் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார்.
  • குவிண்டன் டி காக் 54 ரன்களை குவித்தார்.

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 34 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி சென்னை அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இவருடன் துவக்க வீரராக களமிறங்கிய ரஹானே 24 பந்துகளில் 36 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி 57 ரன்களை குவித்தார். கடைசியில் களமிறங்கிய எம்.எஸ். டோனி 9 பந்துகளில் 28 ரனகளை குவித்தார். இதன் மூலம் சென்னை அணி போட்டி முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது.

177 ரன்களை துரத்திய லக்னோ அணிக்கு கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் குயிண்டன் டி காக் நல்ல துவக்கம் கொடுத்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது. 15 ஓவரில் 134 ரன்களை குவித்த போது குவிண்டன் டி காக் தனது விக்கெட்டை இழந்தார். 

19 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சி.எஸ்.கே. சார்பில் முஸ்தாஃபிசுர் மற்றும் பத்திரனா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Tags:    

Similar News