கிரிக்கெட் (Cricket)

ஜெயசூர்யாவுக்குப் பிறகு... சிஎஸ்கே-வுக்கு எதிராக ரோகித் சர்மாவின் அரிய சாதனை

Published On 2024-04-15 02:19 GMT   |   Update On 2024-04-15 02:19 GMT
  • 2008-ல் சிஎஸ்கே அணிக்கெதிராக ஜெயசூர்யா சதம் அடித்திருந்தார்.
  • அதன்பின் ரோகித் சர்மா தற்போது சிஎஸ்கே அணிக்கெதிராக சதம் அடித்துள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 206 ரன்கள் குவித்தது. பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 186 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா சதம் அடித்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். அவர் 63 பந்துகளில் 11 பவுண்டரி, ஐந்து சிக்ஸ் உடன் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் எப்போதும் மிகப்பெரிய ஆட்டமாக பார்க்கப்படும். இதில் யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பது குறித்து ரசிகர்கள் அறிய ஆவலாக இருப்பார்கள்.

இரு அணிகளுக்கு இடையில் ஐபிஎல் தொடங்கிய முதல் வருடமான 2008-ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் சனத் ஜெயசூர்யா சதம் அடித்திருந்தார். அதற்குப் பிறகு சுமார் 16 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தற்போது சதம் அடித்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு எதிராக சதம் அடித்த இரண்டாவது மும்பை இந்தியன்ஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் பதிரனா 4 விக்கெட் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். டோனி 4 பந்தில் 3 சிக்சருடன் 20 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News