கிரிக்கெட் (Cricket)
null

ஐ.பி.எல். 2024 - அதிக ரன்களை சேஸ் செய்து சாதனை.. 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி

Published On 2024-05-19 13:52 GMT   |   Update On 2024-05-19 13:54 GMT
  • பிரப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 71 ரன்களை அடித்தார்.
  • நடராஜன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 19) நடைபெற்ற முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

பஞ்சாப் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய அதர்வா தைடே அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 46 ரன்களை அடித்து அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 71 ரன்களை அடித்தார். அடுத்து வந்த ரோசோ சிறப்பாக ஆடி 49 ரன்களை அடித்து அவுட் ஆனார். இவருடன் ஆடிய சஷாங்க் சிங் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

போட்டி முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது. ஐதராபாத் சார்பில் நடராஜன் இரண்டு விக்கெட்டுகளையும், விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் பேட் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

சற்றே கடின இலக்கை துரத்திய ஐதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் முதல் பந்திலேயே போல்ட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இவருடன் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 66 ரன்களை விளாசினார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 18 பந்துகளில் 33 ரன்களை குவித்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் குமார் 35 ரன்களை அடித்தார்.

துவக்கம் முதலே அதிரடி காட்டிய ஐதராபாத் அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை குவித்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐதராபாத் அணி இதுவரை தான் சேசிங் செய்ததில் அதிக ரன்களை சேசிங் செய்துள்ளது.

Tags:    

Similar News