ஐபிஎல் வணிக மதிப்பு 1.35 லட்சம் கோடி ரூபாய்: அணிகளில் முதல் இடம் எதற்கு தெரியுமா?
- மும்பை இந்தியன்ஸ் அணி 4 இடத்தில் உள்ளது.
- ஆர்சிபி அணி 2-வது இடத்தில் உள்ளது.
உலகளாவிய முதலீட்டு வங்கி ஹௌலிஹான் லோகி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி ஐபிஎல் (இந்தியன் பிரிமீயர் லீக்) வணிக மதிப்பு இந்த வருடம் 6.5 சதவீதம் உயர்ந்து ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது. அதேவேளையில் பிராண்ட் மதிப்பு 6.3 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் பிராண்ட் மதிப்பு 28 கோடி ரூபாய் ஆகும்.
டாடா குரூப் ஐபிஎல் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற்றுள்ளது. இதற்காக 2024 முதல் 2028 வரை தோராயமாக 2500 கோடி ரூபாய் செலுத்த உள்ளது. இது கடந்த முறையைவிட சுமார் 50 சதம் அதிகமாகும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (23.1 கோடி அமெரிக்க டாலர்) பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்த போதிலும் மிகவும் மதிப்புமிக்க அணியாக திகழ்கிறது. கடந்த ஆண்டை விட மதிப்பு 9 சதவீதம் அதிகரித்துள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியின் வளர்ச்சி 19.30 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஆர்சிபி அணி (22.7 கோடி அமெரிக்க டாலர்) 2-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (21.6 கோடி அமெரிக்க டாலர்) 3-வது இடத்தை பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது இடத்திறகு பின்தங்கியுள்ளது.