கிரிக்கெட் (Cricket)

2012-ல் இஷாந்த் சர்மா என்னை கெட்ட வார்த்தையில் திட்டினார்: உண்மையை உடைத்த கம்ரான் அக்மல்

Published On 2023-08-20 11:17 GMT   |   Update On 2023-08-20 11:17 GMT
  • ஒரு கெட்ட வார்த்தையில் திட்டிய அவருக்கு நான் 20 கெட்ட வார்த்தைகளை பதிலடியாக திருப்பிக் கொடுத்தேன்.
  • டோனி ரெய்னா மட்டும் இடையே வரலனா அது இன்னும் மோசமான சண்டையாக மாறியிருக்கும்.

ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தடுத்து நடக்கவுள்ளது. இதில் விளையாடும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்திற்காக ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இருதரப்பு தொடரில் இஷாந்த் சர்மா மோசமான கெட்ட வார்த்தையால் தம்மை திட்டியதாக கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இஷாந்த் சர்மா என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார். குறிப்பாக ஒரு கெட்ட வார்த்தையில் திட்டிய அவருக்கு நான் 20 கெட்ட வார்த்தைகளை பதிலடியாக திருப்பிக் கொடுத்தேன். இங்கே நான் உண்மையாக பேசுகிறேன். அந்தப் போட்டியை தொடர்ந்து அகமதாபாத் நகரில் அடுத்த நாள் நடைபெற இருந்த டி20 போட்டிக்காக நாங்கள் விமானத்தில் பயணம் மேற்கொண்டோம். அப்போது நான் விராட் கோலி, சோயப் மாலிக், முகமது ஹபீஸ் ஆகியோர் ஒரே வரிசையில் அமர்ந்திருந்தோம். அந்த சமயத்தில் எங்கள் இருவருக்குமிடையே உண்மையாக என்ன நடந்தது என சிலர் கேட்டனர்.

அப்போது அங்கிருந்த இஷாந்த் சர்மா என்னிடம் கெட்ட வார்த்தை பேசியதாக அவர்களிடம் சொன்னார். அதற்கு நீங்கள் திரும்ப வாங்கிக்கொண்ட கெட்ட வார்த்தைகளுக்கு தகுதியானவர் தான் என்று அவர்கள் அவரிடம் சொன்னார்கள். அந்தளவுக்கு அது மோசமான தருணமாக அமைந்தது. இருப்பினும் டோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இடையே வந்தனர். அவர்களுக்கு யார் மீது தவறு இருந்தது என்று தெரிந்த காரணத்தால் உடனடியாக நிலைமையை சமாளித்தனர். இல்லையெனில் அது இன்னும் மோசமான சண்டையாக மாறியிருக்கும்.

குறிப்பாக எனக்கு 2 போட்டிகள் தடையுடன் 5 போட்டிகளுக்கான சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கும். அந்தளவுக்கு அந்த தருணம் மோசமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News