பொதுவாக நான் போட்டி முடிந்ததும் அழ மாட்டேன்.. ஆனால் - பும்ரா நெகிழ்ச்சி
- பொதுவாக நான் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வேலையை முடிப்பவன். ஆனால் இன்று சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.
- நாங்கள் தோல்வியின் பிடியில் இருந்தோம். ஆனால் அங்கிருந்து வென்றது நிலாவின் மேல் நடப்பது போல் இருக்கிறது.
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின. பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் மொத்தமாக 15 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். குறிப்பாக இறுதிப்போட்டியில் 16, 18-வது ஓவரில் வெறும் 4, 2 ரன் மட்டுமே கொடுத்த அவர் 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தார்.
பொதுவாக நான் போட்டி முடிந்ததும் அழ மாட்டேன. ஆனால் இன்று உணர்ச்சிகள் என்னை தூண்டியது என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பொதுவாக நான் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வேலையை முடிப்பவன். ஆனால் இன்று சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. பொதுவாக நான் போட்டி முடிந்ததும் அழ மாட்டேன். ஆனால் இன்று உணர்ச்சிகள் என்னை தூண்டுகிறது. நாங்கள் தோல்வியின் பிடியில் இருந்தோம். ஆனால் அங்கிருந்து வென்றது நிலாவின் மேல் நடப்பது போல் இருக்கிறது. இங்கே என்னுடைய குடும்பமும் இருக்கிறது.
கடந்த முறை நெருங்கியும் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் இன்று எங்களுடைய வேலை முடிந்துள்ளது. இது போன்ற போட்டியில் உங்களுடைய அணியை வெற்றி கோட்டை தாண்ட வைப்பதை விட வேறு சிறந்த உணர்வு இருக்க முடியாது. இது போன்ற பெரிய நாட்கள் வரும் போது நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த தொடர் முழுவதுமே நான் தெளிவாக உணர்ந்தேன்.
எப்போதும் நான் ஒரு நேரத்தில் ஒரு பந்தை பற்றி மட்டுமே சிந்திப்பேன். அதைத் தவிர்த்து அதிகமாக சிந்திப்பதில்லை. ஆனாலும் அங்கே உங்களை உணர்ச்சிகள் மேலே தூக்கும். இருப்பினும் நீங்கள் போட்டியை முடிந்த பின் உணர்ச்சியை வெளிப்படுத்தலாம். 16-வது ஓவரில் பந்தில் கொஞ்சம் கசடு இருந்தது போல் தெரிந்தது. அதை என்னால் ரிவர்ஸ் செய்ய முடியும். அதை செய்யும் போது எந்த பேட்ஸ்மேனுக்கும் அடிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
இவ்வாறு பும்ரா கூறினார்.