கிரிக்கெட் (Cricket)

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஜித்தேஷ் சர்மா: இவர் 3-வது கேப்டன்

Published On 2024-05-18 11:04 GMT   |   Update On 2024-05-18 11:04 GMT
  • இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள் என அறிவிப்பு.
  • 13 போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட்டு வந்தார். ஒன்றிரண்டு போட்டிகளுக்குப் பிறகு அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் துணைக் கேப்டனாக இருந்த ஜித்தேஷ் சர்மா கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த சாம் கர்ரனை கேப்டனாக பஞ்சாப் அணி நியமித்தது. துணைக் கேப்டனாக ஒருவரை அறிமுகம் செய்துவிட்டு, அவரை கேப்டனாக நியமிக்காமல் மற்றொரு வீரரான சாம் கர்ரனை நியமித்ததற்கு கிரிக்கெட் விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

சாம் கர்ரன் தலைமையில் பஞ்சாப் அணி கடுமையாக போராடியது. ஆனால் வெற்றியை முழுமையாக பெறவில்லை. கொல்கத்தா அணிக்கெதிராக 262 இலக்கை எட்டி வரலாற்று சாதனைப் படைத்தது. ஆர்சிபி அணிக்கெதிராக கடந்த 9-ந்தேதி தோல்வியடைந்து பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது. இதனால் 12 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற ராஜஸ்தான் ராயல் அணிக்கெதிரான போட்டியில் வெற்றி பெற்றது. நாளை கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியின்போது பஞ்சாப் அணி கேப்டனாக ஜித்தேஷ் சர்மா செயல்படுவார் என பஞ்சாப் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், ரோசோவ் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகிய இரண்டு வெளிநாட்டு வீரர்கள்தான் இடம் பெறுவார்கள் எனத் தெரிவித்துள்ளது. சாம் கர்ரன் இங்கிலாந்து அணிக்காக விளையாட சொந்த நாடு திரும்பியதாக தெரிகிறது.

Tags:    

Similar News