கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட்டில் பிரையன் லாராவின் சாதனையை முறியடித்த ரூட்

Published On 2024-07-28 10:38 GMT   |   Update On 2024-07-28 10:38 GMT
  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ரூட் 83 ரன்கள் குவித்தார்.
  • இதன் மூலம் பிரைன் லாரா சாதனையை ரூட் முறியடித்துள்ளார்.

பர்மிங்காம்:

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 282 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 54 ரன்களுடன் இங்கிலாந்து தள்ளாடியது. அதனை தொடர்ந்து ஜோ ரூட் (87 ரன்), கேப்டன் ஸ்டோக்ஸ் (54 ரன்), ஜாமி சுமித் (95 ரன்), கிறிஸ் வோக்ஸ் (62 ரன்) ஆகியோரது அரைசதத்தால் இங்கிலாந்து அணி 75.4 ஓவர்களில் இங்கிலாந்து 376 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

இந்த போட்டியில் அடித்த 87 ரன்கள் குவித்ததன் மூலம் ஜோ ரூட் தனது டெஸ்ட் கெரியரில் 143 போட்டிகளில் 12027* ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாராவின் சாதனையை முறியடித்துள்ளர். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த 7-வது வீரராக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் பிரையன் லாரா 11953 ரன்களுடன் 7-வது இடத்தில் இருந்தார். தற்போது அவரின் வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ள ஜோ ரூட் 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

Tags:    

Similar News