கிரிக்கெட் (Cricket)

விராட் கோலி விஷயத்தில் இந்தியா மிகப் பெரிய தவறு செய்கிறது: கம்ரான் அக்மல்

Published On 2024-06-08 08:48 GMT   |   Update On 2024-06-08 08:48 GMT
  • டி20 உலகக் கோப்பையில் இந்தியா , பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன.
  • இம்முறை இந்தியாவை வீழ்த்துவதற்கு பாகிஸ்தானுக்கு வாய்ப்புள்ளது என்கிறார் கம்ரான் அக்மல்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பரான கம்ரான் அக்மல் தனியார் யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவின் பேட்டிங் வரிசை சரியாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை. விராட் கோலி 3-வது இடத்தில் களமிறங்கினால் அழுத்தத்தை உள்வாங்கி வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பார். அதுவே இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்கி, விராட் கோலி 3-வது இடத்தில் வரவேண்டும். விராட் கோலியை இந்தியா தொடக்கமாக களமிறக்கினால் அவர்கள் ஏதோ ஒரு இடத்தில் சிக்கக்கூடும். பொதுவாக விராட் கோலி ஒருபக்கம் நங்கூரமாக நின்று போட்டியை வெற்றிகரமாக முடிக்கக்கூடியவர்.

எனவே, விராட் கோலியை தொடக்கத்தில் களமிறக்கி இந்தியா மிகப்பெரிய தவறு செய்துள்ளது என நினைக்கிறேன். இந்தியா தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். பும்ரா, சிராஜ் ஆகியோர் நன்றாக பந்து வீசுகின்றனர். ஹர்திக் பாண்ட்யா விக்கெட்டுகளை எடுத்தார். ஒரே மைதானத்தில் அவர்களுக்கு 3 போட்டிகள் நடைபெறுவது கண்டிப்பாக சாதகமாக இருக்கும். இதுபோன்ற போட்டிகளுக்கு ஐ.சி.சி. தரமான மைதானத்தை அமைக்கவேண்டும். இல்லை என்றால் ரசிகர்கள் சென்றுவிடுவார்கள் என தெரிவித்தார்.

Tags:    

Similar News