சாய் சுதர்சன், விஜய் சங்கர் அரை சதம் - கொல்கத்தா வெற்றி பெற 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத்
- இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
- முதலில் ஆடிய குஜராத் அணி 204 ரன்கள் குவித்தது.
அகமதாபாத்:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விரித்திமான் சஹா 17 ரன்னில் வெளியேறினார். ஷுப்மன் கில் 39 ரன்னில் அவுட்டானார். அபினவ் மனோகர் 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.
சாய் சுதர்சன் அரை சதமடித்து 53 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய விஜய் சங்கர் 21 பந்தில் அரை சதமடித்தார். அவர் 63 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை குவித்தது. இதையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடுகிறது.