கிரிக்கெட் (Cricket)

கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமனம்- காளி கோயிலில் சாமி தரிசனம் செய்த நிதிஷ் ராணா

Published On 2023-03-29 11:26 GMT   |   Update On 2023-03-29 11:26 GMT
  • கௌதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
  • காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் முதல் பாதியில் இடம் பெற மாட்டார் என்றும், பின்பாதியில் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் வரும் 31-ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. முதல் போட்டியிலேயெ நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.

இதுவரையில் கௌதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அதன் பிறகு கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் பெறவில்லை. இந்த நிலையில், கடந்த சீசனில் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாக அவர் முதல் பாதியில் இடம் பெற மாட்டார் என்றும், பின்பாதியில் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இதன் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயருக்குப்பதிலாக நிதிஷ் ராணாவை கொல்கத்தா அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்துள்ளது.

இந்நிலையில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள நிதிஷ் ராணா மற்றும் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் ஆகியோர் கொல்கத்தாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற காளி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News