அறுவை சிகிச்சைக்காக ஜெர்மனி செல்லும் கே.எல்.ராகுல்
- சிகிச்சை முடிந்து அவர் ஓய்வு எடுப்பார் என்றும், அதன் பிறகும் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று உடல்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கே.எல்.ராகுலுக்கு பதில் மயங்க் அகர்வால் அணியில் இடம்பெறுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை:
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்காக இந்திய அணியின் கேப்டனாக முதலில் நியமிக்கப்பட்ட கே.எல்.ராகுல் இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக வெளியேறினார். இதை தொடர்ந்து டி20 தொடரின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ராகுல் மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி செல்லவுள்ளார். இதையடுத்து அவர் ஜூலை 1 முதல் தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை முடிந்து அவர் ஓய்வு எடுப்பார் என்றும், அதன் பிறகும் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று உடல்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தொடரில் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், கே.எல். ராகுலுக்கு பதில் புதிய துணைக் கேப்டன் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. மேலும் கே.எல்.ராகுலுக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வால் அணியில் இடம்பெறுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.