கிரிக்கெட் (Cricket)

அந்த 3 வீரர்களால்தான் ஆர்சிபி கோப்பையை வெல்ல முடியவில்லை- பார்தீவ் படேல்

Published On 2024-07-16 13:24 GMT   |   Update On 2024-07-16 13:24 GMT
  • அது எப்போதுமே தனிநபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் அணி.
  • விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கெயிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிகபட்சமாக மும்பை, சென்னை அணிகள் 5 முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது. இவர்களுக்கு அடுத்தப்படியாக கொல்கத்தா அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளது. அதை தவிர ராஜஸ்தான், டெக்கான் ஜார்சஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் ஆகிய அணிகள் ஒரு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளனர்.

இந்த கோப்பையை வெல்லாதா அணியாக ஆர்சிபி, பஞ்சாப், லக்னோ ஆகிய அணிகள் உள்ளது. முக்கியமாக விராட் கோலி இடம்பெற்ற ஆர்சிபி அணி கோப்பையை வெல்லாதது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடரில் விராட் கோலி மட்டுமே ஒரே அணிக்காக விளையாடி உள்ளார்.

இந்நிலையில் ஆர்சிபி அணி எப்போதுமே தனிநபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் அணி என அந்த அணியின் முன்னாள் வீரர் பார்தீவ் படேல் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஆர்சிபி அணிக்காக நான் 4 வருடங்கள் விளையாடியுள்ளேன். அது எப்போதுமே தனிநபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் அணி. நான் பெங்களூரு அணியில் இருந்த போது விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கெயிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 

அங்கே அவர்களுக்கு ஸ்பெஷல் முன்னுரிமை இருந்தது. எனவே அங்கே அணி கலாச்சாரம் கிடையாது என்பதை அவர்கள் விளையாடுவதை பார்க்கும் போது தெளிவாக தெரியும். அதனாலேயே அவர்கள் கோப்பையை வெல்லவில்லை

இவ்வாறு பார்தீவ் படேல் கூறினார்.

Tags:    

Similar News