கிரிக்கெட்

உலகக் கோப்பையில் தோல்வி-கடும் விமர்சனம் எதிரொலி: முதல் முறையாக வாய் திறந்த பாகிஸ்தான் வீரர்

Published On 2024-07-03 09:16 GMT   |   Update On 2024-07-03 09:16 GMT
  • டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
  • இந்தத் தோல்வியால் வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

இஸ்லாமாபாத்:

டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தத் தோல்வியால் வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். சில முன்னாள் வீரர்கள் ஒட்டுமொத்த அணியையும் நீக்கவேண்டும் என கோரினர். அணிக்குள் குழுவாதம் பற்றிய வதந்திகளும் உள்ளன.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அணிக்குள் சில அரசியல் இருப்பதாகவும், சில வேறுபாடுகள் இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

ஏதேனும் வேறுபாடுகள் இருந்தாலும், நாங்கள் இதற்கு முன் ஆட்டங்களை இழந்திருக்கிறோம். இது வெறும் வெளிப்புற உரையாடல்.

இதே அணி இறுதிப்போட்டி, அரையிறுதியில் விளையாடியிருந்தாலும் கோப்பையை வெல்லவில்லை என்பது உண்மைதான்.

அணி எதிர்கொள்ளும் விமர்சனம் நியாயமானது. நாங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால் இதற்கு நாங்கள் தகுதியானவர்கள். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத வீரர்களால் வெற்றிபெற முடியாது.

டி20 உலகக் கோப்பையில் எங்கள் ஆட்டத்தில் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். நமது இழப்புகளுக்குப் பின் பல காரணங்கள் உள்ளன. ஒரு அணி தோற்றால் பந்துவீச்சும், பேட்டிங்கும் நன்றாக இருக்கிறது என்று சொல்ல முடியாது என தெரிவித்தார்.

Tags:    

Similar News