கிரிக்கெட் (Cricket)

இந்தியா, வங்காளதேச வீரர்கள், முகமது சிராஜ்

இந்தியாவின் வெற்றி வாய்ப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை- முகமது சிராஜ்

Published On 2022-12-24 22:28 GMT   |   Update On 2022-12-24 22:28 GMT
  • வெற்றிக்கு 100 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், 6 விக்கெட்கள் கைவசம் உள்ளன.
  • இந்திய வீரர்களில் ஒரு ஜோடி நிலைத்து நின்று ஆடினால் வெற்றி பெற முடியும்.

டாக்கா:

இந்தியா வங்காளதேசம் இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. டாக்காவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் ஆடிய வங்காளதேசம், முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 314 ரன்கள் குவித்தது.

தொடந்து 2-வது இன்னிங்சை விளையாடிய வங்காளதேசம் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்தள்ளது.

அக்சர் பட்டேல் 26 ரன்னுடனும், உனத்கட் 3 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் இந்திய அணியிடம் இன்னும் 6 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் உள்ளது.

இந்திய அணியின் வெற்றிக்கு 100 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், இன்று வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றிபெறுமா? அல்லது இந்திய அணியின் எஞ்சிய விக்கெட்டுகளையும் கைப்பற்றி வங்காளதேசம் வெற்றி பெறுமா என்ற பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கூறியுள்ளதாவது: நான்கு விக்கெட்டுகளை விரைவாக இழந்த போதும் பேட்டிங் செய்ய இன்னும் சிலர் இருக்கிறார்கள். அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

அக்சர் ஏற்கனவே செட் ஆகி உள்ளார். அவர் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்துகிறார். ரிஷப் (பண்ட்) மற்றும் ஐயர் (ஷ்ரேயாஸ் ) இன்னும் இருக்கிறார்கள். நாம் அதிகமாக சிந்திக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இவர்களில் யாராவது ஒரு ஜோடி நிலைத்து நின்று ஆடினால் நாம் வெற்றி பெற முடியும். மேலும் இடது மற்றும் வலது கை பேட்டிங் கலவை வங்காளதேச பந்து வீச்சாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இவ்வாறு தெரிவித்தார்.

Tags:    

Similar News