கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு அதிக முறை தகுதி பெற்ற அணி...!

Published On 2023-09-15 02:01 GMT   |   Update On 2023-09-15 02:01 GMT
  • இந்தியா 10 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது
  • பாகிஸ்தான் 5 முறையும், வங்காளதேசம் 3 முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான ஆட்டங்களில் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. இதில் வெற்றி பெறும் அணி இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதும் என்ற நிலையில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

பாகிஸ்தான் நிர்ணயித்த இலக்கை, இலங்கை அணி கடைசி பந்தில் எட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் (ஒருநாள் மற்றும் டி20) 12-வது முறையாக இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மேலும், அதிகமுறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை தொடர்ந்து தக்கவைத்துள்ளது.

இந்தியா 10 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி 2-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் ஐநது முறையும், வங்காளதேசம் 3 முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

கடைசி பந்தில் இலக்கை எட்டிய சம்பவம், ஆசிய கோப்பை தொடரில் இது 2-வது முறையாகும். இதற்கு முன்பாக 2018 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வங்காளதேச அணிக்கெதிராக வெற்றி பெற்றிருந்தது.

ஆசிய கோப்பையில் முதல் மூன்று போட்டிகளில் 68.3 ஓவர்கள் வீசிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் 24 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தனர். ஆனால், கடைசி இரண்டு போட்டிகளில் 52.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினர்.

Tags:    

Similar News