13 ஆண்டுக்கு பிறகு 2011 உலகக் கோப்பையை தொட்டுப் பார்த்த எம்.எஸ்.டோனி
- உலகக் கோப்பையை டோனி தொட்டு மகிழ்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
- ஐபிஎல் தொடரின் 29-வது லீக் போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
மும்பை:
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 29-வது ஐபிஎல் லீக் போட்டி இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், சி.எஸ்.கே .அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி பிசிசிஐ தலைமை அலுவலகத்துக்கு நேற்று சென்றார். அங்கு வைக்கப்பட்டு இருந்த 2011 உலகக் கோப்பை டிராபி மற்றும் சாம்பியன் டிராபி கோப்பையைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது உலகக் கோப்பையை டோனி தொட்டு மகிழ்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகக் கோப்பை டிராபியுடன் போஸ் கொடுத்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி டோனி தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.
மேலும், மும்பையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி மற்றும் ரோகித் சர்மா மூவரும் ஒன்றாக அமர்ந்து பேசிய புகைப்படங்கள் வைரலானது.