மைதானத்தில் கை குலுக்காமல் சென்ற டோனி.. விராட் செய்த சம்பவம் - வைரல் வீடியோ
- நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறியது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி நேற்று தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் சென்னை அணி களமிறங்கியது.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி கடைசி ஓவர் வரை சென்று தோல்வி அடைந்தது. இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறியது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
இதையடுத்து, நேற்றைய போட்டி முடிந்த பிறகு சென்னை அணி வீரர்கள், ஆர்.சி.பி. வீரர்களுக்கு கை குலுக்க வரிசையில் நின்றிருந்தனர். சி.எஸ்.கே. வீரர்களில் முன்னே நின்றிருந்த எம்.எஸ். டோனி பெங்களூரு அணி வீரர்களுக்கு கை குலுக்காமல் டிரெசிங் ரூம் சென்றுவிட்டார்.
களத்தில் இருந்து வெளியே செல்லும் போது வழியில் இருந்த ஆர்.சி.பி. அணியின் பணியாளர்களுக்கு கை கொடுத்த டோனி சோகத்துடன் டிரெசிங் ரூம் சென்றார். எம்.எஸ். டோனி ஆர்.சி.பி. வீரர்களிடம் கை குலுக்காமல் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், எம்.எஸ். டோனி சென்ற பிறகு பெங்களூரு அணியின் விராட் கோலி செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவும் வைரல் ஆகி வருகிறது. வைரல் வீடியோவின் படி, சென்னை வீரர்களிடம் கை குலுக்கிய விராட் கோலி, எம்.எஸ். டோனியை தேடிக் கொண்டு டிரெசிங் ரூம் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Dhoni didn't come on ground for handshake
— Vir8 (@wronggfooted) May 19, 2024
Then kohli goes in the csk camp to meet him ? pic.twitter.com/FkEfHhJzrD