கிரிக்கெட் (Cricket)

ரசிகர்கள் வெள்ளத்தில் உலகக் கோப்பையுடன் நீந்தி வரும் இந்திய வீரர்கள்

Published On 2024-07-04 14:26 GMT   |   Update On 2024-07-04 14:26 GMT
  • சுற்றி இருந்த ரசிகர்கள் முழக்கத்திற்கு மத்தியில் இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியுடன் ஊர்வலத்தை கொண்டாடி வருகின்றனர்.
  • 17 வருடங்களுக்கு பிறகு இந்த பேரணி நடப்பது வீரர்கள் மட்டுமன்றி ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. இதனையடுத்து புயல் காரணமாக தாயகம் திரும்ப தாமதமான நிலையில் இன்று காலை இந்திய அணி டெல்லி வந்தடைந்தது. காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர்.அதன் பிறகு இந்திய அணியினர் அங்கிருந்து மும்பைக்கு புறப்பட்டனர்.

மும்பை கடற்கரை பகுதிகளில் ஒன்றான நரிமன் பாயிண்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வீரர்கள் ஊர்வலமாக சென்று வான்கடே ஸ்டேடியத்தை அடைய உள்ளனர்.

இந்நிலையில் மும்பை வந்தடைந்த இந்திய அணி வீரர்கள் மழையால் ஊர்வலத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ரசிகர்கள் மழையிலும் இந்திய வீரர்களுக்காக வழி நெடுகிழும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதனையடுத்து திறந்தவெளி பஸ்சில் இந்திய வீரர்கள் ஊர்வலத்தை தொடங்கி உள்ளனர். ரசிகர்கள் சூழ பஸ் ஸ்டேடியத்தை நோக்கி நகர தொடங்கியது. சுற்றி இருந்த ரசிகர்கள் முழக்கத்திற்கு மத்தியில் இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியுடன் ஊர்வலத்தை கொண்டாடி வருகின்றனர்.

2007-ம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி முதலாவது டி20 உலகக் கோப்பையை வென்ற போது இதே போல் வெற்றி பேரணி நடத்தப்பட்ட நிலையில் 17 வருடங்களுக்கு பிறகு இந்த பேரணி நடப்பது வீரர்கள் மட்டுமன்றி ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஸ்டேடியத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ,125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

இந்த சிறப்பு வாய்ந்த மகிழ்ச்சியான தருணத்தை உங்களுடன் (ரசிகர்கள்) நாங்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். வெற்றியை மும்பையில் ஊர்வலத்துடன் கொண்டாடுவோம் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News