ஷபாலி வர்மா அதிரடி: 178 ரன்களை குவித்தது இந்தியா
- மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
- முதல் போட்டியில் பாகிஸ்தான் யுஏஇ-யை எளிதில் வீழ்த்தியது.
தம்புல்லா:
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், பி பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்து இடம்பிடித்துள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இன்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் யுஏஇ-யை எளிதில் வீழ்த்தியது.
இந்நிலையில், இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ரன்களை குவித்துள்ளது. ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனைகள் அதிரடியாக ஆடினர்.
முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஹேமலதா 47 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 48 பந்தில் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சஜனா 10 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களைக் குவித்துள்ளது.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் அணி களமிறங்குகிறது.