அதிரடியில் மிரட்டிய மிட்செல்: முதல் டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து
- முதலில் ஆடிய நியூசிலாந்து 226 ரன்களைக் குவித்தது.
- டேரில் மிட்செல் அதிரடியாக ஆடி 27 பந்தில் 61 ரன்கள் குவித்தார்.
ஆக்லாந்து:
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து சிறப்பாக ஆடியது. டேரில் மிட்செல் அதிரடியாக ஆடி 27 பந்தில் 61 ரன்கள் குவித்தார். கேன் வில்லியம்சன் 57 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது.
227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.
இறுதியில், பாகிஸ்தான் 18 ஓவரில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 4 விக்கெட்டும், மில்னே, சீயர்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின்மூலம் டி20 தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலையில் உள்ளது. ஆட்ட நாயகன் விருது டேரில் மிட்செலுக்கு அளிக்கப்பட்டது.