கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தான் அணி வீரர்கள் இடையே மோதல் இல்லை- மூத்த வீரர் தகவல்

Published On 2023-09-19 09:05 GMT   |   Update On 2023-09-19 09:05 GMT
  • பாபர் அசாம்- வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
  • முகமது ரிஸ்வான் தலையிட்டு சமரசம் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

இஸ்லாமாபாத்:

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-4 சுற்றில் இலங்கையிடம் தோற்று பாகிஸ்தான் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

இந்த தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்- வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. முகமது ரிஸ்வான் தலையிட்டு சமரசம் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் இடையே மோதல் இல்லை என்று அங்கு அணியின் மூத்த வீரர் தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக அந்த கூறும்போது, அணியின் ஒரே கவனம் கிரிக்கெட்டில் உள்ளது. விமர்சனங்களை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை .ஒரு போட்டியில் தோல்வியடைவது விமர்சகர்களுக்கு அவர்களின் கருத்துக்களை சொல்ல வாய்ப்பளிக்கிறது.

அணியின் கூட்டத்தில் அனைவரும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர். ஆனால் வார்த்தை மோதல் ஏற்பட்டது என்பதில் எந்த உண்மையும் இல்லை. அனைவரும் ஒன்றாக கூட்டத்தை விட்டு வெளியேறினர். பல வீரர்கள் ஒரே விமானத்தில் பாகிஸ்தானுக்கு திரும்பினர் என்றார்.

Tags:    

Similar News