கடைசி டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து
- அதிரடியாக ஆடிய டெவோன் கான்வே, கிளென் பிலிப்ஸ் இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
- இந்தியா தரப்பில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
நேப்பியர்:
இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேப்பியரில் இன்று நடக்கிறது. நேப்பியரில் விட்டு விட்டு மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து மணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
துவக்க வீரர் பின் ஆலன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய மார்க் சாப்மென் 12 ரன்களில் வெளியறினார். அதிரடியாக ஆடிய டெவோன் கான்வே, கிளென் பிலிப்ஸ் இருவரும் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பிலிப்ஸ் 54 ரன்களிலும், கான்வே 59 ரன்களிலும் அவுட் ஆகினர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் 160 ரன்களில் சுருண்டது.
இந்தியா தரப்பில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.