பிசிசிஐ புறக்கணித்த நிலையில் கேஎல் ராகுல் குறித்து எல்எஸ்ஜி டுவிட் பதிவு
- சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் களம் இறங்கிய ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இந்திய அணியிலும், காத்திருப்போர் பட்டியலிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல். ராகுலுக்கு இடம் கிடைக்கவில்லை.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் களம் இறங்கிய ரிஷப் பண்ட், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கே.எல். ராகுல் புறக்கணிக்கப்பட்டதற்கு டுவிட்டர்வாசிகள் தங்களது விமர்சனங்களை பதவிட்டு வருகிறார்கள். ரிஷப் பண்ட்-ன் சாதனையை கே.எல். ராகுல் சாதனையுடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் கே.எல். ராகுல் விளையாடி வரும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஒரு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்ட் பதிவிட்டுள்ளது. அதில் "கே.எல். ராகுல் எப்போதும் எங்களுடைய நம்பர் ஒன்" எனக் குறிப்பிட்டுள்ளது.