null
ஐபிஎல்-லில் விளையாடினால் இப்படிதான்.. பாக். பத்திரிகையாளர் பதிவுக்கு பதிலடி கொடுத்த மெக்லெனகன்
- பணத்துக்காக ஐபிஎல் தொடரில் விளையாடினால் இப்படிதான் நடக்கும் என பாகிஸ்தான் பத்திரைக்கையாளர் கூறியிருந்தார்.
- இந்த பதிவுக்கு நியூசிலாந்து முன்னாள் வீரர் மெக்லெனகன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
டிரினிடாட்:
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியது. ஏற்கனவே இந்த பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருந்தது.
இதன் மூலம் குரூப் சி-யில் இருந்து ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளான உகாண்டா, பப்புவா நியூ கினியா, நியூசிலாந்து அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
இந்நிலையில் நியூசிலாந்து அணி வெளியேறியதையடுத்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். அதில், ஏப்ரலில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் உலகக் கோப்பை 2024-க்கு தங்களைத் தயார்படுத்துவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு நியூசிலாந்து அணிக்கு கிடைத்தது. ஆனால் அந்த தொடரில் விளையாடாமல் நியூசிலாந்து சீனியர் வீரர்கள் ஐபிஎல் விளையாட சென்றனர். தேசிய அணிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பணத்துக்காக விளையாடினால் இப்படிதான் நடக்கும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு முன்னாள் நியூசிலாந்து வீரரான மிட்செல் மெக்லெனகன் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதில், எங்களது சி பக்கமான அயர்லாந்து மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்ததை என பதிலடி கொடுத்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.