வாணவேடிக்கையால் பற்றி எரிந்த மின்விளக்கு- பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் முதல் போட்டியிலேயே பரபரப்பு
- டாஸ் போடுவதற்கு முன்னரே இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில் உடனடியாக சரி செய்யப்பட்டது.
- மின் விளக்கு பற்றி எரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
ஐபிஎல் போன்று பாகிஸ்தானில் ஆண்டுதோறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. பிஎஸ்எல் என்று அழைக்கப்படும் இந்த தொடரின் 2023-வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது.
பாகிஸ்தானிலுள்ள முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் மைதானத்தில் இருந்த மின்விளக்கில் தீப்பிடித்த எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட குழப்பம், சலசலப்புக்கு பின்னர் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் கலந்தர்கள் இடையிலான போட்டி 30 நிமிடம் காலதாமதமாக தொடங்கியது. இந்தப் போட்டியில் லாகூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
முன்னதாக, இந்த போட்டி தொடங்குவதற்கு முன் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இதில் வெடி ஒன்று மின் விளக்கு மீது மோதி வெடித்தது. இதன் மூலம் ஏற்பட்ட தீபொறி மின் விளக்கில் பற்றி எரிந்துள்ளது. பின்னர் உடனடியாக மின்விளக்குகள் ஒளிருவது நிறுத்தப்பட்டு, தீ அணைக்கப்பட்டது.
ملتان اسٹیڈیم میں پی ایس ایل کی افتتاحی تقریب کے دوران ہونے والی آتش بازی کے باعث فلڈ لائٹس میں آگ لگ گئی... ریسکیو عملے نے آگ پر قابو پا لیا ہے#PSL8 pic.twitter.com/Td940KTWKP
— Qadir Khawaja (@iamqadirkhawaja) February 13, 2023
இதைத்தொடர்ந்து மின் விளக்குகள் சரி செய்யப்பட்டு, போட்டி காலதாமதமாக தொடங்கப்பட்டது. மின் விளக்கு பற்றி எரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
டாஸ் போடுவதற்கு முன்னரே இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், உடனடியாக சரி செய்யப்பட்டது. இதில் யாருக்கும் காயமும், பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.