நம்பிக்கை அளித்த முகமது ரிஸ்வான்: இங்கிலாந்துக்கு 159 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 68 ரன்கள் விளாசினார்.
கராச்சி:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி கராச்சியில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
பாகிஸ்தான் அணியின் துவக்க ஜோடி முகமது ரிஸ்வான் -பாபர் ஆசம் ஜோடி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல அடித்தளம் அமைத்தது. முகமது ரிஸ்வான் 68 ரன்களும், பாபர் அசாம் 31 ரன்களும் சேர்த்தனர். இப்திகார் அகமது 28 ரன்கள், ஹைதர் அலி 11 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.
இங்கிலாந்து தரப்பில் லூக் வுட் 3 விக்கெட் கைப்பற்றினார். ஆதில் ரஷித் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.