3 இறுதிப்போட்டி யோசனை: ரோகித் சர்மாவுக்கு பதிலடி கொடுத்த கம்மின்ஸ்
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் சரியாக இருக்கும் என்று ரோகித் தெரிவித்து இருந்தார்.
- ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் தங்கம் வெல்வதற்கு ஒரு பந்தயமோ, ஒரு இறுதி ஆட்டமோ மட்டுமே உள்ளது.
லண்டன்:
இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் சரியாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கு ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தொடர் என்று வரும்போது அதில் எத்தனை ஆட்டங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சாம்பியன்ஷிப் என்றால் அதில் ஒரே ஒரு இறுதி ஆட்டம் இருந்தால் தான் சரியாக இருக்கும்.
ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் தங்கம் வெல்வதற்கு ஒரு பந்தயமோ, ஒரு இறுதி ஆட்டமோ மட்டுமே உள்ளது. இந்த ஒரு வெற்றிக்காக பல்வேறு நாடுகளில் சென்று டெஸ்ட் ஆட்டங்களில் வெல்ல வேண்டியிருந்தது. சில ஆட்டங்களில் தோற்று இருந்தாலும் அதில் இருந்து மீண்டும் வந்து இருக்கிறோம்.
இவ்வாறு கம்மின்ஸ் கூறினார்.