கிரிக்கெட் (Cricket)
டி20 பெண்கள் கிரிக்கெட்: வங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா
- கடைசி போட்டியில் வங்காளதேசத்தை 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
- ஸ்மிரிதி மந்தனா (33), தயாளன் ஹேமலதா (37), சர்மன்ப்ரீத் கவுர் (30) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 156 ரன்கள் குவித்தது.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. முதல் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய பெண்கள் அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வங்காளதேசத்தை 5-0 என ஒயிட்வாஷ் செய்தது. ஸ்மிரிதி மந்தனா (33), தயாளன் ஹேமலதா (37), சர்மன்ப்ரீத் கவுர் (30) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 156 ரன்கள் குவித்தது.
பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் வங்கிய வங்காளதேச வீராங்கனைகளால் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ராதா யாதவ் 3 விக்கெட்டும், ஆஷா சோபனா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடரின் சிறந்த வீராங்கனை, 5-வது போட்டியின் சிறந்த வீராங்கனை விருதுகளை ராதா யாதவ் வென்றார்.