பந்து வீச்சில் அரை சதம் விளாசிய 4 பவுலர்கள்: டி20-யில் மோசமான சாதனை படைத்த ஆர்சிபி
- முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 287 ரன்கள் குவித்தது.
- பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வீழ்த்தியது.
பெங்களூரு:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 287 ரன்கள் குவித்தது. 287 ரன்கள் குவித்ததன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிர ரன்கள் குவித்த அணி தங்கள் முந்தையை சாதனையை ஐதராபாத் மீண்டும் தகர்த்தது. பின்னர் இமாலய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் வரை எடுத்தது. இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் ஆர்சிபி அணி பந்து வீச்சாளர்கள் மோசமான சாதனையை படைத்துள்ளனர். டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 4 பவுலர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுவே முதல் முறையாகும்.
பெங்களூரு அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் டாப்லே (68 ரன்), யாஷ் தயாள் (51 ரன்), பெர்குசன் (52 ரன்), விஜய்குமார் வைசாக் (64 ரன்) ஆகியோர் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்துள்ளனர்.