இறுதிப் போட்டிதான் இலக்காக இருந்தது: அதை எட்டிவிட்டோம்- கம்மின்ஸ்
- இந்த சீசன் முழுவதும் வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர்.
- இந்த சீசன் தொடங்கும்போது எங்களுடைய இலக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்பதுதான்.
ஐபிஎல் 2024 சீசனின் குவாலிபையர்-2 போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 175 ரன்கள் விளாசியது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 139 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் ஐதராபாத் அணி 36 ரன்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றது குறித்து பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-
இந்த சீசன் முழுவதும் வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். அணி வீரர்களுக்குள் சிறந்த வைப் உள்ளதை நீங்கள் பார்க்க முடியும். இந்த சீசன் தொடங்கும்போது எங்களுடைய இலக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்பதுதான். அதை செய்துவிட்டோம்.
இது மொத்தமாக அணி உரிமையாளருக்குரியது. அவர்களில் 60 அல்லது 70 பேர் தங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் இதில் ஈடுபடுத்துகிறார்கள். இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் ஒன்றை கடப்போம் என்று நம்புகிறேன்.
எங்கள் பலம் எங்கள் பேட்டிங் என்பது எங்களுக்கு தெரியும். இந்த அணியில் எங்களுக்கு இருக்கும் அனுபவத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. புவனேஸ்வர் குமார், நடராஜன், உனத்கட் எனது வேலையை எளிதாக்குகின்றனர்.
மிடில் ஓவரில் அபிஷேக் சர்மா சிறப்பாக பந்து வீசினார். வலது கை பேட்ஸ்மேன்கள் விளையாடும்போது அவரை பயன்படுத்தினோம். அவர் இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார். 170 கடினமான இலக்கு. இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால், வாய்ப்பு எங்களுக்குதான் என்பது தெரியும்.
இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.