கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட் தாக்கத்தை ஏற்படுத்துவார்: ரிக்கி பாண்டிங்

Published On 2024-05-29 04:36 GMT   |   Update On 2024-05-29 04:36 GMT
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டனான ரிஷப் பண்ட் 13 போட்டிகளில் 446 ரன்கள் குவித்தார்.
  • அவர் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி குணமடைந்தார். சுமார் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். தொடரில் விளையாடினார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டனான அவர் 13 போட்டிகளில் 446 ரன்கள் குவித்தார். அவர் டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், உலகக் கோப்பை போட்டியில் ரிஷப் பண்ட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு மீண்டும் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் பணிபுரிந்த ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்துள்ளேன். அவர் டி20 உலகக் கோப்பை தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்புகிறேன். உண்மையில் அவரது பேட்டிங் பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஏனென்றால் அவர் எவ்வளவு நன்றாக ஆடுகிறார் என்பதும், அவரது பேட்டிங் ஆற்றல் என்ன என்பதும் அனைவருக்கும் தெரியும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News