கிரிக்கெட்

முதலில் நாட்டுப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள்- பராக்கை விளாசிய ஸ்ரீசாந்த்

Published On 2024-07-02 14:52 GMT   |   Update On 2024-07-02 14:52 GMT
  • தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் 2024 டி20 உலகக் கோப்பையில் பார்க்க மாட்டேன் என்று பராக் கூறியிருந்தார்.
  • அவர்களுக்கு முதலில் நாட்டுப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள் என்று நான் சொல்வேன்.

ஐபிஎல் தொடரில் பெரிய அளவிள் விளையாடாத ரியான் பராக். 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தம் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இதனால் டி20 உலகக் கோப்பை அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ஜெயித்தால் என்ன? தோற்றால் என்ன? என்று பராக் தெரிவித்திருந்தார். அத்துடன் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் போது மட்டுமே அதைப்பற்றி கவலைப்படுவேன் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் ஃபைனலில் மட்டும் எந்த அணி வெல்லப் போகிறது என்பதை செய்தியில் பார்த்து தெரிந்து கொள்வேன் என்றும் ரியான் பராக் தெரிவித்திருந்தார். அவருடைய இந்த கருத்து ஏற்கனவே இந்திய ரசிகர்களிடம் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஜிம்பாப்வே தொடரில் இடம்பிடித்துள்ள அவர் முதலில் நாட்டுப்பற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

தமக்கு வாய்ப்பு கிடைக்காததால் இந்த உலகக் கோப்பையை பார்க்கப் போவதில்லை என்று சில இளம் வீரர்கள் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு முதலில் நாட்டுப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள் என்று நான் சொல்வேன். அதன் பின்பே நீங்கள் கிரிக்கெட்டின் ரசிகனாக இருக்க வேண்டும்.

உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் நாட்டுக்காக தேர்வாகியுள்ள வீரர்களுக்காக நீங்கள் முழு மனதுடன் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

என ஸ்ரீசாந்த் கூறினார்.

Tags:    

Similar News