கிரிக்கெட் (Cricket)

சுயநலமற்ற கேப்டன்: ரோகித்தை புகழ்ந்த சோயப் அக்தர்

Published On 2024-06-28 12:26 GMT   |   Update On 2024-06-28 12:26 GMT
  • இங்கிலாந்து அணிக்கு சுழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரியாது.
  • இந்த பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்தது கிடையாது என்றார் அக்தர்.

பார்படாஸ்:

டி20 உலகக் கோப்பை தொடரில் கயானாவில் நேற்று நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

இந்தியர்களால் சுழலை சமாளிக்க முடியும். ரோகித் சர்மா இங்கிலாந்தின் அதில் ரஷீத்தை சமாளித்தார்.

ஆனால் இங்கிலாந்து அணியினருக்கு எப்படி சுழலை எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரியாது.

இந்த பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்தது கிடையாது.

அங்கே இங்கிலாந்து முதலில் பேட் செய்து 150 ரன்கள் எடுத்து இந்தியாவை அழுத்தத்தில் தள்ளியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் 2-வது பேட்டிங் செய்வதாக அடம் பிடித்தனர்.

மறுபுறம் இந்தியா வெற்றிக்கு தகுதியானவர்கள். இந்த தொடரை அவர்கள் வெல்ல வேண்டும் என்று நானும் விரும்புகிறேன்.

கடந்த ஆண்டு வென்றிருக்க வேண்டிய உலகக் கோப்பையில் இந்தியா தோல்வியை சந்தித்ததால் நானும் மனமடைந்தேன். ஏனெனில் அவர்கள் வெல்வதற்கு தகுதியானவர்கள்.

தொடர்ச்சியாக தாக்கத்தை ஏற்படுத்தி கோப்பையை வெல்லவேண்டும் என ரோகித் சர்மா சொல்லி வருகிறார். அதை வெல்வதற்கு அவர் தகுதியானவர்.

இந்நேரம் அவர் 2 உலகக் கோப்பையை கையில் வைத்திருக்க வேண்டும். இம்முறை அவர்கள் கோப்பையை விடக்கூடாது.

மிகவும் பெரிய வீரராகவும், சுயநலமற்ற கேப்டனாக தன்னுடைய அணிக்காக விளையாடும் அவர் தனது கேரியரை உச்சமாக முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News